×

மணிப்பூர் முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

இம்பால்: மணிப்பூர் முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி முதல் கலவரம் வெடித்து வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் வீடு அருகே ெவடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பத்தில் முதல்வர் பிரேன்சிங்கின் தனிப்பட்ட இல்லத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ தொலைவிலும், பிஎஸ்எப் முகாம் இருந்த பகுதியில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவிலும் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

The post மணிப்பூர் முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Chief Minister ,Imphal ,Pranab Singh ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு