- இந்தியக் கூட்டணி
- தில்லி
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- அம்பேத்கர்
- விஜய் சாக்
- பாராளுமன்ற
- Amitsha
- குளிர்கால கூட்டம்
- அம்பேத்கர் பி.
- தின மலர்
டெல்லி: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் வெளியே விஜய் சவுக் பகுதியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி முழக்கம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிய உள்ள நிலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடைபெற்ற சிறப்பு விவாதத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‘ அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது தற்போது பேஷனாகி விட்டது. இந்த அளவுக்கு கடவுளின் பெயரை கூறி இருந்தால் 7 பிறவிகளிலும் சொர்க்கத்தை அடையலாம்’ என்று தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமித் ஷா பேசிய முழு உரையின் இந்தச் சிறிய பகுதி குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிய உள்ள நிலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
The post அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.