- புதுச்சேரி
- சட்டமன்ற உறுப்பினர்
- சட்டசபை
- எம்எல்ஏ நேரு
- சட்டமன்ற செயலாளர்
- தயலன்
- புதுச்சேரி ரோல்யான்பாட்டிடே
- தின மலர்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டுவர வலியுறுத்தி சட்டசபை செயலர் தயாளனிடம் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு இன்று மனு கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்ைடை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ நேரு இன்று காலை சட்டசபை செயலர் தயாளனை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தற்போதைய சபாநாயகரின் போக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. மற்றும் அமைச்சரவையின் பங்கை மீற முயற்சிக்கிறது. இதன் மூலம் புதுச்சேரியூனியன் பிரதேசத்தின் நிழல் முதலமைச்சராக செயல்படுகிறார். தனது அரசியலமைப்பு கட்டமைப்புகளின் மீது எந்த அரசியல் சாயத்தையும் பூசி கொள்ளக்கூடாது என்ற தனது அரசியலமைப்பு கடமையை மீறுகிறார்.
புதுச்சேரி பிரதேசத்தின் அரசியல் அமைப்புகளையும் அதிகாரிகளையும் பொது கவனத்திற்காக எந்தவொரு முக்கியமான அழைப்பிலும் தனது படத்தை திணிக்க வலியுறுத்துகிறார். இது சபாநாயகர் பதவியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறது.
மேற்கண்ட காரணங்களுக்காக, தற்போதைய புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகரை நீக்குவதற்கான இந்த அறிவிப்பை சட்டமன்ற தளத்திற்கு முன்வைத்து, 1966 ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் மற்றும் 1963ம் ஆண்டு யூனியன் பிரதேசங்கள் ஆட்சி சட்டத்தின் 7 (2) (சி) ப்படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும், தலையீட்டையும் கோருகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்எல்ஏ மனு appeared first on Dinakaran.