×

ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு?

ராமேஸ்வரம்: ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீப்ளி – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் வரை ரயில் இயக்கப்படும் என அட்டவணை வெளியானதால் புதிய பாலம் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 550 கோடி ரூபாய் செலவில் புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பாலம் திறப்பு குறித்த தேதி வெளியாகும் என மதுரை ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் எல்.என்.ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு? appeared first on Dinakaran.

Tags : New Pamban Bridge ,Rameswaram ,Pamban Bridge ,Healy ,Rameswaram… ,
× RELATED புதிய பாம்பன் பாலத்தில் 75 கிலோ மீட்டர்...