×

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.. ஐ.நா. அமைப்பின் விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

சென்னை: ஐ.நா. அமைப்பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதி வருகிறது மக்களைத் தேடி மருத்துவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது; ‘நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் புதுப் புரட்சி, ஐ.நா. அமைப்பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதி வரும் #மக்களைத்_தேடி_மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு இன்று மருந்துப் பெட்டகங்களை வழங்கினேன்!

மருத்துவமனைகளை நாடிச் செல்லவோ, வீட்டுக்கு மருத்துவர்களை வரவழைக்கவோ வசதியில்லாத எண்ணற்றோருக்கு வீடுதேடிச் சென்று ‘பிசியோதெரபி’ அளித்து வாழ்வில் ஒளியேற்றும் சாதனையையும் சத்தமின்றிப் படைத்து வரும் இத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணமான 14 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றி!’ என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.. ஐ.நா. அமைப்பின் விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,UN ,Chief Minister of Medicine ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...