×

அமித்ஷா பேச்சால் 2ம் நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

டெல்லி: அமித் ஷாவை கண்டித்து எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது. அம்பேத்கரை அவமதித்து பேசிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பினர். ஏற்கனவே மதியம் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவை மீண்டும் கூடியது. அமித் ஷாவை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பியதால் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post அமித்ஷா பேச்சால் 2ம் நாளாக நாடாளுமன்றம் முடங்கியது appeared first on Dinakaran.

Tags : Parliament ,Amit Shah ,Delhi ,Ambedkar ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு