×

தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

டெல்லி: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. 14 நாட்கள் அவகாசம் அளித்து நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட வேண்டும். நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடர் 20-ம் தேதியுடன் முடிவதால் நோட்டீஸ் அளிக்க 14 நாட்கள் அவகாசம் இல்லை. 14 நாள் அவகாசம் இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.

The post தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dhankar ,Delhi ,Rajya Sabha ,Jagdeep Dhankar ,Rajya ,Sabha ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கை...