மறைமலை நகர் நகராட்சி பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

செங்கல்பட்டு: மறைமலை நகர் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டுவதால் அங்கு சுற்று தெரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு சாலை விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி பகுதிக்குட்பட்ட அண்ணா சாலையில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் கால்நடைகள் உணவுக்காக அதிக அளவில் அந்தப் பகுதியில் ஒன்று கூடுவதால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 21 வார்டுகளை கொண்ட மறைமலைநகர் நகராட்சி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது. தனியார் தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள மறைமலைநகர் பகுதியில் அதிக அளவில் கால்நடைகளும் சுற்றித் திரிகின்றன.

பொதுவாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்திருந்தாலும் கிராமப்புறங்கள் ஒட்டிய பகுதியாக மறைமலை நகர் நகராட்சி திகழ்ந்து வருகிறது. மறைமலை நகர் நகராட்சி 21 வார்டுகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி வந்தாலும், அண்ணா சாலையில் அதிக அளவில் கால்நடைகள் குப்பைகளை சுற்றிலும் சுற்றித் திரிவதால் அண்ணா சாலை பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சியினர் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கால்நடைகளால் அதிக அளவில் ஏற்படும் விபத்துக்கள் குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

The post மறைமலை நகர் நகராட்சி பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: