மதுராந்தகம்: செய்யூர் தொகுதியில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சி, சித்தாமூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு சட்டப்பேரவை தலைவருக்கு எழுதிய கடிதத்தில் பெஞ்சல் புயலால் பெருமளவு பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டிய சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி ஆகிய பகுதிகள் புயல் மழையால் வீடுகள் விளைநிலங்கள் ஆகியவற்றை மழை வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். எனவே, அந்த பகுதிகளை புயல் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு செய்து அரசின் நிவாரண உதவிகள் வழங்கிடக்கோரி சட்டப்பேரவை விதி எண் 55(1)-ன் கீழ் சிறப்பு கவண ஈர்ப்பு தீர்மானத்தினை எம்எல்ஏ பாபு வழங்கியுள்ளார்.
The post இடைக்கழி நாடு பேரூராட்சி, சித்தாமூர் ஒன்றியத்தில் புயலால் பாதித்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பனையூர் மு.பாபு எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.