செங்கை, காஞ்சியில் மிதமான மழை

காஞ்சிபுரம், டிச.12: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில், பெஞ்சல் புயல் பாதிப்பால் பலத்த மழை பெய்து, கடந்த ஒரு வாரமாக ஓய்ந்திருந்தநிலையில். நேற்று காலை முதல் மீண்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் மூலம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் வானிலை முன்னறிவிப்பு மையம் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில தினங்களாக மேக மூட்டமாக காணப்பட்டது. நேற்று காலை திடீரென கருமேகங்கள் உருவாகி மழை பெய்தது. தொடர்ந்து மாலை வரை விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, பூக்கடை சத்திரம், ஒலிமுகமதுபேட்டை, ராஜகுளம், பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், புஞ்சை அரசன் தாங்கல், செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த மிதமான மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதோபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post செங்கை, காஞ்சியில் மிதமான மழை appeared first on Dinakaran.

Related Stories: