×

அரியலூர் அருகே உலக மண் தின விழா

அரியலூர், டிச. 6: அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி அருகேயுள்ள மணக்குடி கிராமத்தில் உலக மண் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அரியலூர் வேளாண் இணை இயக்குநர் கீதா கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு மண்வள அட்டையை வழங்கி, இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரையாற்றினர். அரியலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் கணேசன கலந்து கொண்டு மண் வள மேம்பாடு குறித்து பேசினார்.

வேளாண் உதவி இயக்குநர் சாந்தி மண் சேகரிக்கும் முறை மற்றும் மண் ஆய்வின் முக்கியத்துவம், குறித்தும், அரியலூர் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ஜென்சி கலந்து கொண்டு மண்வள மேம்பாடு, மண்ணில் உள்ள சத்துக்களும் அவற்றை கண்டறியும் முறைகள் குறித்தும், மூத்த வட்டார வேளாண் அலுவலர் சதீஷ் மண்வள அட்டையின் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி அலுவலர் தேவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post அரியலூர் அருகே உலக மண் தின விழா appeared first on Dinakaran.

Tags : World Soil Day Festival ,Ariyalur ,World Soil Day ,Manakudi ,Kallangurichi ,Geeta ,
× RELATED அரசு தோட்டக்கலை கல்லூரியில் உலக மண் தின விழிப்புணர்வு பேரணி