×

திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

 

செம்மனார்கோயில், டிச.12: திருக்கடையூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சி திருமெய்ஞானத்தில் இந்துசமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 108 சங்குகள் சிவலிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு செய்து, வேத மந்திரங்கள் முழங்க சங்குகளில் இருந்த புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோயில் குருக்கள் கணேச குருக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Thirumeynanam Brahmapureeswarar temple ,Semmanarkoil ,Thirukkadaiyur Brahmapureeswarar temple ,Brahmapureeswarar ,Hindu Samaya Charitable Trust ,Thirumeynanam ,Pillaiperumalnallur Panchayat ,Thirukkadaiyur ,Tharangambadi Taluk ,Mayiladuthurai District ,Appar ,Sambandhar ,Sundarar ,
× RELATED கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு...