20 அடி ஆழ கிணற்றில் விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்பு

மாமல்லபுரம், டிச.6: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை இசிஆர் சாலையையொட்டி உள்ள அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரிக்கு எதிரே 500 மீட்டர் தொலைவில் அடர்ந்த புற்களுக்கு நடுவே உறை கிணறு ஒன்று உள்ளது. அங்கு, 20க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு வந்தன. அப்போது, திடீரென ஒரு எருமை மாடு அங்குள்ள 20 அடி ஆழம் கொண்ட உறை கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.

இதனைக்கண்ட அங்குள்ளவர்கள், ஓடி வந்து மாட்டை மீட்க முயன்றனர். ஆனால், மீட்க முடியவில்லை. பின்னர், மாமல்லபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, தீயணைப்பு அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர் வெங்கட கிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி எருமை மாட்டை உயிருடன் மேலே தூக்கி விட்டனர். பின்னர், எருமை மாடு துள்ளி குதித்து ஓடியது.

The post 20 அடி ஆழ கிணற்றில் விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: