திராவிடர் கழகம் சார்பில் எஸ்.எம்.முரளி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் அசோகன் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக சார்பில், பெரியார் நினைவு நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், நிர்வாகிகள் கேயுஎஸ் சோமசுந்தரம், வள்ளிநாயகம் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், பகுதி செயலாளர் பாலாஜி ஸ்டாலின், உள்ளிட்ட அதிமுகவினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதிமுக சார்பில், மாநகர் செயலாளர் மகேஷ் தலைமையில் நகர செயலாளர் மகேஷ் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, தேமுதிக சார்பில் மாநில நிர்வாகி ஏகாம்பரம், விசிக சார்பில், மாநகர மாவட்ட செயலாளர் மதிஆதவன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர விசிக சார்பில், பெரியாரின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. காஞ்சி மாவட்ட செயலாளர் எழிலரசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வின்சென்ட், நகர செயலாளர் கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பெரியார் 51வது ஆண்டு நினைவு தினமான நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சலவாக்கத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ஒன்றிய செயலாளர் குமார், நகர செயலாளர் குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல், ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், நகர மன்ற துணை தலைவர் சிவலிங்கம், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பாரதிபாபு, ஒன்றிய குழு உறுப்பினர் சேகர், துணைத்தலைவர் நந்தா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று, இலத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பெரியாரின் சிலைக்கு ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன் மாலை அணிவித்து புகழாஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, இராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய திமுக சார்பில், பேரூராட்சி வளாகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்யா சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புச்செழியன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், பேரூராட்சி துணை தலைவர் பரசுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்போரூர் ஒன்றிய அதிமுக சார்பில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், நகர செயலாளர் முத்து மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
விசிக சார்பில், முன்னாள் மாவட்ட செயலாளர் இராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், விடுதலை நெஞ்சன், நகர செயலாளர் ஆனந்தன், சிறுதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதா அருள், ஊடகப்பிரிவு செயலாளர் சமரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். திருப்போரூர் வடக்கு ஒன்றிய மதிமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகு, மாவட்ட துணை செயலாளர் சசிகலா லோகநாதன் உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோன்று அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு தினமும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்போருர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் இள்ளலூர் சந்திப்பில் இருந்து பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலை வரை மெழுகுவர்த்தி ஏந்தியபடி, ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
The post 51வது நினைவு நாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.