இதனை தொடர்ந்து, ஊராட்சியில் உள்ள கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தனர். அப்போது, அவர்கள் பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தர வேண்டும். ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கூடுதலாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனை கேட்டு அறிந்த எம்எல்ஏ சுந்தர், செல்வம் எம்பி ஆகியோர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய்காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ரவி, திமுக கிளை செயலாளர் நாகராஜ், இளைஞரணி நிர்வாகி தென்னேரி சத்தியா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post அயிமன்சேரி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.