செங்கை, காஞ்சியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கலெக்டர்களிடம் மனு வழங்கி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற கூட்டத்தில், அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தொடர்ந்து ஐந்து தினங்களாக, அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு என பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை அரசியல் அமைப்புகள் அறங்கேற்றி வருகின்றனர். செங்கல்பட்டில், அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலும் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கர் ஏற்பாட்டில் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், குமரவேல், பால்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், அங்கிருந்து கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு அமித் ஷாவை பதவி விலக வலியுறுத்தியும் கண்டித்தும் கண்டன கோஷமிட்டவாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், கண்டன பேரணியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலவிக்னேஷ், மகளிரணி நிர்வாகிகள் என 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்: அம்பேத் கரை அவமதித்த ஒன்றிய அமைச்சரை கண்டித்தும், காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யாவிடம், மாவட்ட பொறுப்பாளர் சினிவாசராகவன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, முன்னாள் மாவட்ட தலைவர் காஞ்சி மதியழகன், மாநகர துணை மேயர் குமரகுருநாதன், மாநகர தலைவர் நாதன், மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், சிறுபான்மை பிரிவு சாந்த குமார், இளைஞர் அணி மாவட்ட வக்கீல் பிரிவு கதிரவன், கீதா, ஏ.கே.லோகநாதன், குப்புசாமி, அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post செங்கை, காஞ்சியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கலெக்டர்களிடம் மனு வழங்கி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: