இந்த கருத்தரங்கத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், நிறுவனங்களின் குழுக்கள், கல்வித்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு, கலாச்சார நுண்ணறிவுகளை ஒத்திசைத்தல் மற்றும் நவீன கல்வி முறைகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து விரிவாக விவாதித்தன. பாரம்பரியம் மற்றும் புதுமைகளை ஒருங்கிணைத்தல்” என்ற தலைப்பில் நடந்து முடிந்த இந்த இரண்டு நாள் கருத்தரங் கமானது, முழுமையான கற்றல், அனுபவ கல்வி மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை சமகால கற்பித்தல் நடைமுறைகளில் ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பரிமாறி கொள்வதற்கான தளமாக விளங்கியது.
கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய பாபா ராம்தேவ், “இன்றை இளம் தலைமுறையினர் இந்தியாவின் பாரம்பரிய விழுமியங்களை உள்ளடக்கிய, முன்னேற்ற திட்டங்களை கொண்ட உலக தலைவர்களாக உருவாக முயற்சிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார். அறிவியல் மற்றும் கலை கல்வி மூலம் ஆர்வத்தை வளர்ப்பதற்கு இந்திய பாரம்பரிய உணர்வுகளுடன் பள்ளி கல்வி சூழலை மறுவடிவமைப்பது, புதுமையான அனுபவ கற்றல் நுட்பங்களை ஊக்குவித்தல் உள்ளிட்டவை குறித்தும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.
The post பாரம்பரியம், புதுமைகளை ஒருங்கிணைத்தல் தொடர்பாக பதஞ்சலியின் கல்வி கருத்தரங்கம் appeared first on Dinakaran.