செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களின் பணி திறனாய்வு கூட்டம் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மேலாண்மை இயக்குனர் சிவமலர், செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட மானாம்பதி, ஒரகடம், ஆமூர், வடமணி பாக்கம், பசும்பூர் ஆகிய ஐந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அப்போது, செங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் உமாசங்கரி, மதுராந்தகம் சரக துணைப்பதிவாளர் செல்வி, மத்திய வங்கியின் உதவி பொது மேலாளர், அலுவலக கண்காணிப்பாளர்கள், கள அலுவலர்கள், மத்திய வங்கியின் பணியாளர்கள், சங்க செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: