வெள்ளத்தில் பாலம் துண்டிப்பு மலைவாழ் மக்கள் அவதி செங்கம் அடுத்த கல்லாத்தூர் ஆற்றில்

செங்கம், டிச. 6: கடந்த சில நாட்களாக தொடர் அதிக கன மழை பெய்து வந்தது இந்நிலையில் பெண்கள் புயல் காரணமாக மழை அதிகரித்து குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் பெருகி அணையின் பாதுகாப்புக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் அதிவேகமாக வந்ததில் கல்லாத்தூர் கிராமத்தில் உள்ள பாலம் துண்டித்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மலைவாழ் மக்கள் பெரிதும் அவதிகுள்ளாகிவிட்டனர். உடனடியாக பாலத்தை சரி செய்து போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெள்ளத்தில் பாலம் துண்டிப்பு மலைவாழ் மக்கள் அவதி செங்கம் அடுத்த கல்லாத்தூர் ஆற்றில் appeared first on Dinakaran.

Related Stories: