×

பூட்டிய வீட்டில் ரூ50 ஆயிரம் திருட்டு


திருத்தணி: திருவாலங்காடு அருகே, சின்னம்மா பேட்டை, பூஞ்சோலை நகரை சேர்ந்தவர் கலாநிதி(44). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி. 100 நாள் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கலாநிதி தொழிற்சாலைக்கும், ரேவதி 100 நாள் வேலைக்கும் சென்று விட்டனர். இதனையடுத்து, ரேவதி மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ₹50 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. நகைகளை மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்ததால் நகைகள் தப்பியது. பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கலாநிதி அளித்த புகாரின் பேரில் திருவாலங்காடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post பூட்டிய வீட்டில் ரூ50 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Kalanithi ,Pooncholai ,Chinnamma Pettai ,Tiruvalangadu ,Revathi ,Kalanidhi Factory ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் முடி...