திருத்தணி தொகுதியில் திமுக கிளை கூட்டங்கள்


திருத்தணி: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் திமுக கிளை கூட்டங்கள் நேற்று தொடங்கியது. இக்கூட்டங்கள் 3 நாட்கள் நடைபெற உள்ளது. திருத்தணி மேற்கு, கிழக்கு ஒன்றியத்தில் நேற்று கிளை கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டங்களில் கிளை செயலாளர் தலைமையில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க கிளை கூட்டங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டு ஒருங்கிணைந்து செயல்படவும்,

வீடு வீடாக சென்று குறிப்பாக பெண்களிடம் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. திருத்தணி மேற்கு ஒன்றியம் கோரமங்கலம் கிராமத்தில் கிளை செயலாளர், ஊராட்சி மன்றத்தலைவர் நரசிம்ம ராஜ் தலைமையில் கிளை கூட்டம் நடைபெற்றது. இதில், கிளை நிர்வாகிகள் மற்றும் பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் கோரமங்கலம் கிராமத்தில் கிளை செயலாளர்கள் ரவி, வெங்கட் ராஜ், குப்பன், பெருமாள் ஆகியோர் தலைமையில் கிளை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

The post திருத்தணி தொகுதியில் திமுக கிளை கூட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: