சொந்த தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே நேருவை மோடி அவதூறு செய்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு மக்களவையில் நேற்றுமுன்தினம் விவாதம் நடந்தது. இதில் பேசிய மோடி, நேருவையும் காங்கிரசையும் கடுமையாக தாக்கினார். இந்தநிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில்,கடவுள் இல்லை என்றால், அவரைக் கண்டுபிடிப்பது அவசியம் என்று புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி வால்டேர் கூறினார்.

நேரு இல்லாமல் பிரதமர் என்ன செய்வார். அவருக்கு நோயியல் ஆவேசம் உள்ளது. தனது சொந்த தோல்விகளில் இருந்து தேசத்தின் கவனத்தை திசை திருப்புவது அவசியம். தற்போதைய சவால்களில் இருந்து தேசத்தின் கவனத்தை திசை திருப்ப அவருக்கு நேரு அவசியமாகிறது. உண்மையில் தோல்விகள் குறித்து, அவர் முழுமையான மவுனம் காக்கிறார். தேசத்தின் பல சாதனைகளுக்காக நேரு பெயரை அவர் மறுப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

The post சொந்த தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே நேருவை மோடி அவதூறு செய்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: