மின்னணு வாக்கு இயந்திரம் மீது குறை சொல்வதை நிறுத்துங்கள்: காங்கிரசுக்கு உமர் அப்துல்லா அறிவுரை

புதுடெல்லி: காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா அளித்த சிறப்பு பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் (காங்கிரஸ்) 100க்கும் மேற்பட்ட எம்பிக்களை பெறும் போது, அது கட்சிக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடுகிறீர்கள். அதே தேர்தல் இயந்திரத்தை பயன்படுத்தி சில மாதங்களுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும் போது குறை கூறுகிறீர்கள். இத்தகைய அணுகுமுறையை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நீங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்காதவர்கள் என்றால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அப்படி என்றால் தோல்வி அடையும் போது மின்னணு இயந்திரங்கள் மீது தாராளமாக குற்றம் சாட்டலாம். இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை நிலையில் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். அடிக்கடி கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றார்.

The post மின்னணு வாக்கு இயந்திரம் மீது குறை சொல்வதை நிறுத்துங்கள்: காங்கிரசுக்கு உமர் அப்துல்லா அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: