அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதற்கு எதிராக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கும் தொழிலதிபர் ரத்தன் டாடா, சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தனர்.

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் பங்கேற்றுள்ளனர். சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய ஈபிஎஸ்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம். தமிழ்நாட்டுக்கு பாரபட்சமின்றி ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம். 2026ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தி அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்து நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

The post அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: