கிருஷ்ணகிரி : 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த எனது தலைமையில் குழு. ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்றுவது பற்றி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அனைத்து ஒப்பந்தங்களையும், முதலீடுகளாக மாற்றும் பணி 70% நிறைவு பெற்றுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா appeared first on Dinakaran.