இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதானியும் பிரதமர் மோடியும் ஒன்று தான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி விசாரணை நடத்த மாட்டார். ஏனென்றால் அவர் விசாரணையைத் தொடங்கினால், அவரும் விசாரணைக்கு உள்ளாவார்.
அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜாக்கெட் அணிந்தும் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
The post அதானி விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்?: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி கேள்வி! appeared first on Dinakaran.