2022-ல் குஜராத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் படேல் என்பவர் தனது குடும்பத்துடன் மாணவர் விசாவில் சென்றுள்ளார். கல்லூரி ஒன்று வழங்கிய விசா மூலம் கனடா சென்றவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் கடும் பனி காரணமாக ஜெகதீஷ் படேல் குடும்பத்தை ஏஜென்ட் -நடுவழியில் தவிக்கவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து, மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் காரணமாக பனியில் உறைந்து ஜெகதீஷ் படேல், மனைவி, மகன், மகள் உயிரிழந்தனர். இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜெகதீஷ் படேல் உயிரிழப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.
அதன்படி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக டிச.10, 19 தேதிகளில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை சோதனையின்போது ரூ.19 லட்சம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மும்பை, நாக்பூர், காந்திநகர், வடோதரா உள்பட 8 இடங்களில் நடந்த சோதனையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.கனடா கல்லூரிகள் மூலம் இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு ஏஜெண்டுகள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் கனடாவுக்கு 35,000 பேரை வெறும் 2 ஏஜெண்டுகள் அனுப்பி வந்தது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் நாக்பூரைச் சேர்ந்த ஏஜெண்டுகள் பெரிய அளவில் சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வருகின்றனர்.சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு குடிபெயர வைக்க 1700 ஏஜெண்டுகள் குஜராத்தில் செயல்பட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் 3,500 ஏஜெண்டுகள் செயல்பட்டு வருவதாக அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளது. ஏராளமான ஏஜெண்டுகளை கைதுசெய்த நிலையில் இன்னும் 800 ஏஜெண்டுகள் இன்றும் செயல்பட்டு வருகின்றனர்.
The post ஆண்டுதோறும் 35,000 பேர் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்.. இந்தியாவில் 3,500 ஏஜெண்டுகளுக்கு தொடர்பு ; வெளிவந்த அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.