இந்த காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, பொதுச் ெசயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் 200 முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த காரிய கமிட்டி கூட்டத்தில், சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கக்கோரியும், அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்கக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும், அடுத்த ஆண்டுக்கான காங்கிரசின் செயல் திட்டம் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒன்றிய பாஜக ஆட்சியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஜனநாயகத்தின் சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற சவால்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1924ம் ஆண்டு அதே நகரில் (டிச. 26) மகாத்மா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்து, காங்கிரஸ் மாநாட்டை நடத்தினார். அதன் நூற்றாண்டையொட்டி, கர்நாடகாவில் காரிய கமிட்டி கூட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘மக்களவை தேர்தலுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களுக்கு சட்டப் பேரவை தேர்தல்கள் நடந்தன. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்வரும் மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அது குறித்தும் விவாதிக்கப்படும். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்களின் செயல்பாடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான போராட்டங்கள், அதானி, மணிப்பூர் பிரச்னைகளை கையாள்வது என்பது உள்ளிட்ட விசயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்’ என்று கூறினர்.
The post கர்நாடகாவின் பெலகாவியில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: பேரவை தேர்தல்கள் முடிந்த நிலையில் பரபரப்பு appeared first on Dinakaran.