ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ மணக்குடி கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியபுரம், வாவுத்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்களும் செல்லவில்லை.
குமரி கடற்கரை கிராமங்களை சுனாமி தாக்கி 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்ததன் 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிச.26-ல் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
The post 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் அஞ்சலி! appeared first on Dinakaran.