திண்டுக்கல், டிச. 5: திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட கோடாங்கிநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (57). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நாகலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த கணேசன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எஸ்ஐ கிருஷ்ணவேணி, சிறப்பு எஸ்ஐ சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திண்டுக்கல்லில் கட்டிட தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.