×

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற புதிய நிபந்தனை..!!

டெல்லி: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3 சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் கருவிகள் வைத்திருப்போர் வீடு பெற தகுதியற்றவர்கள். ரூ.50,000-க்கு மேல் கடன் பெற தகுதி உள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருப்போர், அரசு ஊழியர் குடும்பத்தினர் திட்டத்தில் பயன்பெற முடியாது. வேளாண் சாராத தொழில் நிறுவனங்கள் நடத்துவோர், மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்களும் திட்டத்தில் பயன்பெற இயலாது என நிபந்தனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

The post பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற புதிய நிபந்தனை..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற...