×

9, 10ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியலில் 2 விதமான பாடம் அறிமுகம்: சிபிஎஸ்இ பரிசீலனை

புதுடெல்லி: சிபிஎஸ்இ ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 விதமான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் ஸ்டான்டர்ட் மற்றும் பேசிக் என இரண்டு விதமான பாடத்திட்டத்தை வழங்குவதற்கு பரிந்துரைத்தது. புதிய தேசிய கல்வி கொள்கையின் கீழ் இந்த பாடத்திட்டத்துக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் சிபிஎஸ்இ நிர்வாக குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் சிபிஎஸ்இ 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தையும் ஸ்டான்டர்ட் மற்றும் அட்வான்ஸ்ட் என இரண்டு நிலைகளாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றது. தேசிய கல்வி கொள்கையின் கீழ் கணித பாடத்தில் தொடங்கி அனைத்து பாடங்கள் மற்றும் அதற்கான மதிப்பீடுகள் இரண்டு நிலைகளில் வழங்கப்படலாம். இந்த பாடத்திட்டம் குறித்த முன்மொழிவானது பாடத்திட்டக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான முழுமையான செயல்முறை மற்றும் கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.

The post 9, 10ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியலில் 2 விதமான பாடம் அறிமுகம்: சிபிஎஸ்இ பரிசீலனை appeared first on Dinakaran.

Tags : CBSE ,NEW DELHI ,Central Board of Secondary Education ,Dinakaran ,
× RELATED பிப்ரவரி 15 முதல் தொடங்குகின்றன...