×

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

புதுடெல்லி:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திர சூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் ஓய்வு பெற்றதால், உச்ச நீதிமன்றத்தில் 34 பணியிடங்கள் 32ஆக குறைந்தது. இதையடுத்து சஞ்சீவ் கண்ணா தலைமையில் கடந்த மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்ற கொலிஜிய கூட்டம் நடந்தது. இதில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் மன்மோகன் நியமனத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

The post டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Judge ,Manmohan ,Supreme Court ,NEW DELHI ,Chief Justice ,TY Chandra Chute ,Justice Hima Kohli ,Sanjiv Khanna ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கில் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!