- முதலீட்டாளர்களின்
- அசாம்
- பிரதமர் மோடி
- புது தில்லி
- முதலீட்டாளர் மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு
- அசாமின் குவஹாத்தி
- முதல் அமைச்சர்
- ஹிமந்த பிஸ்வா சர்மா
- மோடி
- முதலீட்டாளர்
- தின மலர்
புதுடெல்லி: அசாமின் கவுகாத்தியில் அடுத்தாண்டு பிப்ரவரி 24, 25ம் தேதிகளில் முதலீட்டாளர் மற்றும் உட்கட்டமைப்பு உச்சி மாநாடு நடக்கிறது. இதில், பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடியுடன் நாடாளுமன்ற இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அழைப்பு விடுத்தார்.
இதேபோன்று மெகா ஜுமுர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படியும் அவருக்கு அழைப்பு விடப்பட்டது. இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஒப்பு கொண்டதாக அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் இந்த சந்திப்பின்போது, அசாமில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி பிரதமரிடம் ஹிமந்த பிஸ்வா விளக்கினார்.
The post அசாமில் அடுத்தாண்டு முதலீட்டாளர் உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.