கொள்ளிடம்,டிச.3: கொள்ளிடம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகி கரையை கடந்ததையொட்டி நேற்று முன்தினம் காலையிலிருந்து மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. மழை இன்றி இருண்ட வானம் நிலவி வந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை திடீரென கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சில பகுதிகளில் அரை மணி நேரம் கனமழையும் அதனைத் தொடர்ந்து சிறு தூறல் மழையும் இருந்து வந்தது. இதனால் காய்ந்து கிடந்த சாலைகளில் மீண்டும் மழை நீ பெருக்கெடுத்து ஓடியது.
The post கொள்ளிடம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை appeared first on Dinakaran.