மின் ஊழியர்கள் ஆப்பாட்டம்

 

விருதுநுநகர், டிச.4: ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க கோரி மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் ராஜாராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 63 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பழைய ஓய்வூய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றி, இடமாறுதல் அளிக்க வேண்டும். 1.12.2019க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பதவி உயர்வுகளையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

The post மின் ஊழியர்கள் ஆப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: