பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகள் ஆய்வு

 

ஈரோடு, டிச.4: ஈரோட்டில் ரூ.200.71 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பெரும்பள்ளம் ஓடை சீரமைக்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையர் மனிஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடை ரூ.200.71 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து, மேம்படுத்தும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பெரும்பள்ளம் ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், நான்கு கட்ட பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. 2 கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் டாக்டர் மனிஷ் நேற்று பெரும்பள்ளம் ஓடையில் நடக்கும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முடிவுற்ற பணிகளையும், நடந்து வரும் பணிகளையும், மீதமுள்ள சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பொறியாளர் பிச்சமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: