மேற்கு மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம்

 

விருதுநகர், டிச.4: விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. கள ஆய்வுக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தமிழ் நாட்டிலேயே உறுப்பினர் உரிமைச் சீட்டு கார்டுகளை அதிக அளவில் புதுப்பித்தது நமது விருதுநகர் மேற்கு மாவட்டம் என்றார். இதில், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எம்.எல்.ஏ மான்ராஜ், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் உள்ளிட்ட ஒன்றிய, நகர், பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

The post மேற்கு மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: