- மக்களவை
- ராகுல் காந்தி
- அமித் ஷா
- மோடி கட்கரி
- பிரியங்கா
- புது தில்லி
- மோடி
- மக்களவை செயலகம்
- பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- மத்திய அமைச்சர்
- நித்ன் கட்காரி
- அமித் ஷா கட்கரி
- தின மலர்
புதுடெல்லி: மக்களவையில் பிரதமர் மோடிக்கு முதல் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு நேர் எதிரே ராகுல்காந்திக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மோடிக்கு அடுத்த இடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அமர்வார். மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரிக்கு, இரண்டாவது நெடுவரிசையில், பிரிவு எண் 58 ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக நான்காவது இருக்கை வழங்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் யாதவுக்கு அடுத்ததாக முன்வரிசையில் அமருவார். திமுக தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஏ.ராஜா ஆகியோருக்கும் முன்வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு நான்காவது வரிசையில் உள்ள இருக்கை எண் 517 ஒதுக்கப்பட்டுள்ளது.
The post மக்களவையில் சீட் ஒதுக்கீடு மோடிக்கு எதிரே ராகுல்காந்தி அமித்ஷாவுக்கு அடுத்து கட்கரி: பிரியங்காவுக்கு 4வது வரிசை appeared first on Dinakaran.