×

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் அவசியம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்

புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்குவது அவசியமாகும் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு,‘‘சமூக அணுகுமுறைகளில் மாற்றம் தேவை. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை புரிதல் மட்டுமே.

அனுதாபம் இல்லை. அவர்கள் இயற்கையான பாசத்திற்கு தகுதியானவர்கள். அனைத்திற்கும் மேலாக அவர்கள் மரியாதையை அனுபவிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை கண்ணியத்துடனும், சமத்துவத்துடனும் நடத்தும் சமூகத்தை மக்கள் வளர்க்க வேண்டும். மாற்றுத்திறன் என்பது பொருத்தமான ஆதரவை கோரும் ஒரு சிறப்பு தகுதி. அவர்களின் தேவைகளுக்கு சிறப்பு பயிற்சி, ஆலோசனை மற்றும் வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

அவர்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில் சமூகமும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு முன்வரவேண்டும். பல்வேறு துறைகளில் குறிப்பாக விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகள் சாதனை புரிந்துள்ளனர். சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் வசதிகள் வடிவமைக்கப்படும்போது உண்மையான அணுகல்தன்மை அடையப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாழ்வது என்பது சமூக முன்னேற்றத்தின் முக்கியமான அளவுகோலாகும். உண்மையான உணர்திறன் கொண்ட சமூகம் அனைவருக்கும் சம வாய்ப்புக்களையும் தடையற்ற அணுகலையும் உறுதி செய்கிறது” என்றார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் அவசியம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : President ,Draupathi Murmu ,New Delhi ,Drabupati Murmu ,National Awards ,Delhi ,Dhrauvathi Murmu ,
× RELATED ராணுவ தளவாட ஏற்றுமதி 30% அதிகரிப்பு: திரவுபதி முர்மு