×

கன மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

அண்ணா நகர்: சென்னையில் பெஞ்சல் புயல் காரணமாக, விடிய விடிய தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட் சுற்றுவட்டார பகுதியில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் காய்கறி, பூ, பழம் ஆகிய பொருட்களை வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே வராமல் திரும்பி சென்றனர்.

அங்காடி நிர்வாகம் சார்பில் ராட்சத மோட்டார் மூலம் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று காலை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அதேபோல மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியையும் பார்வையிட்டு அந்த பகுதியில் மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளையும் பார்வைட்டார். மழைநீர் தேங்காதவாறு சுழற்சி முறையில் ஊழியர்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடர்ந்து விடாமல் பெய்து வரும் மழையால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்காடி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் ராட்சத மோட்டார் மூலம் அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை என்று கூட பார்க்காமல் அங்காடி நிர்வாக அதிகாரிகள் மழை நரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

The post கன மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Anna Nagar ,Benjal ,Chennai ,Koyambedu Market… ,Dinakaran ,
× RELATED பனிப்பொழிவு, வரத்து குறைவால் பூக்கள் விலை அதிகரிப்பு