கறிவேப்பிலை கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை – அரை கப்,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி.

செய்முறை:

ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு மூடவும். சில நிமிஷங்கள் கழித்துத் திறந்தால், கறிவேப்பிலையின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கி, தண்ணீர் பச்சை நிறமாகி இருக்கும். கறிவேப்பிலையை வடிகட்டி எடுத்துவிட்டு, அந்தத் தண்ணீரில் ரவையை வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும், உப்பு, மோர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு என்று விருப்பமானதை கலந்து அருந்தலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

The post கறிவேப்பிலை கஞ்சி appeared first on Dinakaran.