மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ்

தேவையானவை:

சிறு துண்டுகளாக நறுக்கிய கிழங்கு – 2 கப்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 12,
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்,
நசுக்கிய பூண்டு – 5 பல்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
தேங்காய்த்துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை :

கிழங்கை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கைகளால் நசுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து வதக்கி கிழங்கை போட்டு குறைவான தீயில் சிறிது நேரம் கிளறி தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

The post மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் appeared first on Dinakaran.