பொடியாக நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு – 2 கப்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2,
நாட்டுத்தக்காளி – 3 (மிக்ஸியில் அரைக்கவும்),
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மல்லித்தூள் – 1½ டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள் – தலா 1/2 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு – தலா 2,
பிரியாணி இலை – தேவையான அளவு,
கெட்டித்தயிர் – 2 டீஸ்பூன்,
புதினா இலை – தேவையான அளவு,
வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கு.
செய்முறை:
கிழங்கை 1/2 வேக்காட்டில் வேக வைக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அடுத்து சோம்புத்தூள் தக்காளியுடன் பச்சை வாசனை போக வதங்கியதும், மல்லி, மிளகாய், மஞ்சள், கரம் மசாலாத்தூள், வேக வைத்த கிழங்கு சேர்த்து சிறிது நேரம் கிளறி உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கலந்து வாணலியை மூடி கிரேவிப் பதம் வந்ததும் புதினா தூவி இறக்கவும். பூரி, சப்பாத்தி, பரோட்டாவுக்கு பெஸ்ட் காம்பினேஷன். உதிரியாக வடித்த சாதத்துடன் தேவையான இக்கலவையுடன் லெமன் ஜூஸ், நெய் சேர்த்து கலந்தும் சாப்பிடலாம்.
The post மரவள்ளிக்கிழங்கு கிரேவி appeared first on Dinakaran.