தேவையானவை:
சப்பாத்தி – 4,
சர்க்கரை – (பொடித்த சப்பாத்திதூள் 1 கப் என்றால்) கால் கப்,
ஏலக்காய்தூள்- அரை டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, அது மொறுமொறுப்பாக ஆகும் வரை, ஒரு சுத்தமானதுணியால் அழுத்தி அழுத்திவிட்டு எடுங்கள். எண்ணெய் தேவையில்லை. இதை சிறிய துண்டுகளாக உடைத்து,மிக்ஸியில் போட்டு பொடியுங்கள்.சர்க்கரையில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து, பதம் (பிசுக்கு பதம்) வந்ததும் சப்பாத்திதூள்,ஏலக்காய்தூள், நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள்.
The post சப்பாத்தி உருண்டை appeared first on Dinakaran.