பன்னீர் நெய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு…

மல்லி விதை – 2 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி வரமிளகாய் – 12 (1 1/2 மணிநேரம் சுடுநீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
கெட்டித் தயிர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
புளி – 100 கிராம் (100 மிலி நீரில் ஊற வைத்து சாறு எடுததுக் கொள்ளவும்)
நாட்டுச்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

நெய் – 5 டேபிள் ஸ்பூன் + 3 டேபிள் ஸ்பூன்
பன்னீர் – 400 கிராம் (பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
கறிவேப்பிலை – 1 கொத்து
மல்லித் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எலுமிச்சை – 1

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களாக மல்லி விதை, வெந்தயம், மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை ஒவ்வொன்றாக, அதுவும் தனித்தனியாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.* பின்பு மிக்சர் ஜாரில் 1 1/2 மணிநேரம் சுடுநீரில் ஊற வைத்த 12 காஷ்மீரி வரமிளகாயை எடுத்து, அத்துடன் வறுத்த பொருட்களை சேர்க்க வேண்டும்.பின் அதில் கெட்டித் தயிர், புளிச்சாறு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 5 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதே நெய்யில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.பின்பு அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, மசாலாவை நன்கு வதக்க வேண்டும்.அடுத்து அதில் ப்ரை செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட வேண்டும்.பின் அதில் மல்லித் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி 2-4 நிமிடம் கிளறி இறக்கி, எலுமிச்சை சாற்றினை பிழிந்து, நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட் தயார்.

 

The post பன்னீர் நெய் ரோஸ்ட் appeared first on Dinakaran.