வெள்ளரிக்காய் தோசை


தேவையானப் பொருட்கள்:

ஒன்றரை கப் துருவிய வெள்ளரிக்காய்
3 பச்சை மிளகாய்
ஒரு துண்டு இஞ்சி துருவியது
2 கப் ரவை
அரை கப் கோதுமை மாவு
அரை கப் துருவிய தேங்காய்
1 ஸ்பூன் வெல்லம்
உப்பு தேவைக்கேற்ப
1 கப் தண்ணீர் அல்லது கால் கப் தயிர்
தோசை சுட நெய் அல்லது எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் வெள்ளரிக்காயை துருவி எடுத்து வைத்துக்கொள்ளவும். துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை இதனுடன் சேர்க்கவும்.இதில் ரவை, கோதுமை, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்க்கவும்.மாவை நீர்ப்பதத்திற்குக் கொண்டு வர 1 கப் தண்ணீர் அல்லது 1/4 கப் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். தோசையின் சுவை நன்றாக இருக்க தயிர் சேர்ப்பது நல்லது.இப்போது வெள்ளரிக்காய் தோசைக்கான மாவு ரெடி.தோசைக்கல்லை எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி அதனை தோசை போல சுற்றவும்.இப்போது தோசை மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு மூடியால் மூடி வைத்து வேக விடவும்.வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.வெள்ளரிக்காய் தோசை ரெடி.

The post வெள்ளரிக்காய் தோசை appeared first on Dinakaran.