- தென்பெண்ணை, கோரை ஆறு
- விழுப்புரம் மாவட்டம்
- விழுப்புரம்
- டென்பென்னா
- கோராய் ஆறு
- மருங்கியூர்
- Chetur
- பையூர்
- கொங்கராயனூர்
- தின மலர்
விழுப்புரம்: தென்பெண்ணை, கோரையாற்றில் வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 கிராமங்கள் தனித்தீவாக மாறி உள்ளன. மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயனூர் ஆகிய 4 கிராமங்களும் வெள்ளம் சூழ்ந்து தனித் தீவுகளாயின. 2 ஆறுகளிலும் முழு கொள்ளளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் பல கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.
பையூரில் மேம்பாலத்துக்கு செல்லும் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் மாரங்கியூர், சேத்தூர் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
The post தென்பெண்ணை, கோரையாற்றில் வெள்ளம்: விழுப்புரம் மாவட்டத்தில் தனித்தீவாக மாறிய 4 கிராமங்கள் appeared first on Dinakaran.