×
Saravana Stores

ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!!

தருமபுரி: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்நிலைகள் நிறைந்து வெள்ளம் குடியிருப்புகள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் அப்பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Western Ghats ,Dharmapuri ,Meteorological Department ,North East ,Tamil Nadu ,Fenchal ,
× RELATED ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா...