விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

 

திண்டுக்கல், டிச. 2: திண்டுக்கல்லில் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் வேளாண் விளை பொருட்களை தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. வேளாண் துணை இயக்குனர் நிர்மலா தலைமை வகித்து துவங்கி வைத்தார். மதுரை மண்டல விற்பனை அலுவலர் வேணுகோபால், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஷைனி. திண்டுக்கல் மாநில அக்மார்க் வேளாண் அலுவலர் பராசக்தி, வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) கிருஷ்ணகுமார்,

உழவர் சந்தை வேளாண் அலுவலர் பூர்ணிமா, திண்டுக்கல் விற்பனை குழு மேலாளர் மஹாலக்ஷ்மி ஆகியோர் வேளாண் விளைபொருட்கள் அக்மார்க் செயல்பாடுகள் தரச்சான்று குறித்து பேசினர். பயிற்சி முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தில் அக்மார்க் தரச்சான்று பெற்ற பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விவசாயிகளுக்கு அக்மார்க் வேளாண் வணிக திட்டங்கள் மற்றும் விற்பனை குழு செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அட்மா திட்ட உதவி தொழிநுட்ப மேலாளர் பொன் தமிழரசு உட்பட பலன் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: